பொலிஸ் குழுக்கள் விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கண்டுபிடிப்பதற்காக பல பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பல குழுக்கள் அனுப்பப்பட்ட போதிலும் மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் கைது செய்யவில்லை.

இந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்படவுள்ளதாக கடந்த வாரம் சட்டமா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

சந்தேக நபராக பெயரிடப்பட்ட மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னரே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜூன் 2ஆம் திகதி அவரைக் கைது செய்தனர்.

அதன்பின்னர் அவரை ஜூன் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE