Markerer ettårsdagen for invasjonen av Ukraina 24. februar
உக்ரேனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை காட்டுவதற்காக பெர்கனில் மாசி 24ம் நாள் பேர்கன் நகரசபையால் ஓராண்டு நினைவு நாள் அனுஷ்ட்டிக்கப்பட உள்ளது. இந்நாள் குறித்து தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பேர்கன் நகரபிதா உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்குபற்றவுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை ஒரு வருடத்தை எட்டுகின்றது. இப்போரானது ஐரோப்பாவின் புவிசார் அரசியல் சூழ்நிலையை பெரிதும் பாதித்தும் மாற்றியும் உள்ளது. மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து பெர்கன் நகர் பல உக்ரேனிய அகதிகளை ஏற்று குடியமர்த்தியுள்ளது.
பேர்கன் நகரசபையானது, நகரத்தில் உள்ள பல நிறுவனங்களுடன் சேர்ந்து யுத்த படையெடுப்பின் ஓராண்டு நிறைவை மக்களோடு பகிரவுள்ளனர்.