தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
பிரிட்டனில் 2020ம் ஆண்டில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நடந்தது, அதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. லண்டன் போலீசார் லண்டன் பிரதமர், நிதி அமைச்சருக்கு அபராதம் விதித்தனர்.
நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் போரீஸ் ஜான்சன் பேசியது,
2020-ம் ஆண்டு எனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. தவறு செய்ததாக நினைக்கவில்லை. தவறு நிகழ்ந்திருந்தால் அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.