உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை நோர்வே வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமர் Jonas Gahr Støre (Ap)(தொழிலாளர் கட்சி) தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் இராணுவத் தாக்குதல் கடுமையான சர்வதேச சட்ட மீறல் ஆகும். அப்பாவி மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தானது. ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், மற்றும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நோர்வே பிரதமர் Jonas Gahr Støre (Ap)வியாழக்கிழமை காலை NTB க்கு எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.