கொவிட் சூழ்நிலையின் வெளிச்சத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின்படிநாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
அன்றைய தினம் முதல் இம்மாதம் 11 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முன்னதாக தீர்மானித்திருந்தது.
இலங்கையில் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.