நடிகர் விஜய் இறக்குமதி செய்த BMW கார் வழக்கில் தொடர் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறக்குமதி செய்த BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நுழைவு வரி செலுத்த தாமதம் ஆனதால் 400 சதவீதம் அளவுக்கு வணிகவரி துறை அபராதம் விதித்ததாக மனுவில் விஜய் புகார் தெரிவித்திருந்தார்.
அதிகப்படியாக விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடந்துள்ளதாக நடிகர் விஜய் மனுவில் விளக்கம் அளித்திருந்தார்.