வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் அளவீடு வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி அல்லது விற்பனைக்கு முன் வணிக பயன்பாட்டிற்கு ஏற்றதா என சோதிக்கப்பட்ட மாதிரிகளுக்கு துறையிடமிருந்து முன் அனுமதி பெறப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸி மீட்டர்களில் அடையாள ஸ்டிக்கரை ஒட்டவும் உத்தேசித்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.