25 பேருக்கு எதிரான வழக்கு மீள விசாரணைக்கு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018 டிசம்பரில் மாவனெல்ல உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE