மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தினை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் அமெரிக்கர் .
57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், கடந்த 3 நாட்களாக உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் உயிர் பிழைப்பதற்கான நீண்ட கால வாய்ப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.