பேர்கனில் எதிர்வரும் தை 13, 20 ம் திகதிகளில்,17.00 மணி தொடக்கம் 20.00 மணி வரையில் Sentralbadet விலே Drop-in வழியாக தடுப்பு ஊசிகள் ஏற்றப்படும். எந்த வகையான டோஸ் என்றாலும் அங்கு வழங்கப்படும், ஏற்கனவே நீங்கள் பெற்றுள்ள டோசுகளிற்கிடையே இருக்க வேண்டிய குறைந்தபட்ச இடைவெளிகளை பூர்த்திசெய்திருக்க வேண்டும்.
ஒஸ்லோவில் அனைத்து நகர தடுப்பூசி அரங்குகளிலும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா தொற்றிலிருந்தும், அதிக பாதிப்பிலிருந்தும் நம்மை பாதுகாக்க தடுப்பு ஊசிகள் அதி முக்கியம்.
2003ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
கொரோனா தொலைபேசி 55 56 77 00 இலக்கத்துக்கு அழைத்தும், உங்கள் பதிவினை செய்து கொள்ளலாம்.