ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி 75வீதத்தால் உதவும் என்று கண்டறியப்பட்டு்ளளது.
இங்கிலாந்தின் சுகாதார காப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே மனிதரில் செலுத்தப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஒமிக்ரோன் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனைக் கொண்டிருந்தன.
எனினும் பூஸ்டர் அதனை சீர் செய்து ஒமிக்ரோனில் இருந்து 75வீத பாதுகாப்பை வழங்கியுள்ளது.
எனவே மூன்றாவது பூஸ்டர் அளளை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.