உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒமைக்ரான் கொரோனா மாறுபாட்டின் அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் புதிய கொரோனா மாறுபாடு தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
இதுவரை, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மாறுாபட்டை விட சற்று வித்தியாசமான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு நீடித்த வலி, வேதனையை ஏற்படுத்தும் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பை ஏற்படுத்தவில்லை என கருத்துக்கள் உள்ளன.
#Corona #WHO #SouthAfrica #Omicron
ஆனால், தொற்று கண்டறியப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், ஒமைக்ரான் சுவை அல்லது வாசனை இழப்பு ஏற்படுத்தாது என உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு ஒமைக்ரானின் அறிகுறிகள் மற்ற வகைகளில் இருந்து வேறுபட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதாவது இருமல், காய்ச்சல் மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை இன்னும் கவனிக்க வேண்டிய முக்கிய மூன்று அறிகுறிகளாகும்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமான இளைஞர்கள் தீவிர அறிகுறிகளுடன்#Corona #WHO அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களில் பலர் தடுப்பூசி போடவில்லை அல்லது ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இரண்டு டோஸ் மற்றும் ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது புதிய மாறுபாட்டால் ஏற்படும் நோய்களிலிருந்தும் மற்ற எல்லா வகை கொரோனா மாறுாபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும் என்று இது அறிவுறுத்துகிறது.