ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெற வயதான முதியவரை திருமணம் செய்த நிலையில் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது.
இந்த தகவலை வழக்கறிஞர் Miriam E. Rocah வெளியிட்டுள்ளார். அதன்படி Olivia Raimo என்ற ஜமைக்கா நாட்டை சேர்ந்த 30 வயது இளம்பெண் அமெரிக்கரான 74 வயது முதியவரை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
சட்ட விரோதமாக அமெரிக்க குடியுரிமை பெறவே முதியவரை மணந்தார் Olivia. இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகளுக்கான நேர்காணலுக்குத் தயாராக கடந்தாண்டு ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து அவர்களின் திருமணம் முறையை நிரூபிக்க Oliviaவும் அவர் கணவரும் சென்றனர்.
ஆனால் இந்த விடயத்தை வைத்து குடியுரிமை பெறுவது கடினம் என Oliviaவிடம் வழக்கறிஞர் கூறினார். இதனால் Oliviaவுக்கு கோபம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதியவரின் வீட்டில் இருந்த போது கழிவறையில் அவரை உட்கார வைத்து Olivia ப்ளேடால் அவர் மணிக்கட்டை அறுத்துள்ளார்.
அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் வீட்டு சுகாதார உதவியாளர் வீட்டிற்கு வந்தார்.
அவரை உள்ளே அனுமதிக்க Olivia மறுத்தார், பின்னர் அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தந்த நிலையில் பொலிசார் வந்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது, இருந்த போதிலும் தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவர் தனது கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் இழந்தார்.
இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட Olivia மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தான் அவர் குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. Oliviaவுக்கான தண்டனை விபரம் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் திகதி வழங்கப்படும்.
அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.