நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி நிலவரம்..இந்தியா அணிக்கே ஷாக் குடுத்த…!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

இதில் 13 ரன்களில் அகர்வால் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து புஜாரா களத்துக்கு வந்தார். தற்போதைய நிலவரப்படி கில் 35 ரன்களுடனும், புஜாரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் ஸ்கோர் 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களாக உள்ளது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி ஆகியோருக்கும் இந்த தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டது.

இதனால் அனுபவம் குறைந்த வீரர்களுடன், நியூசிலாந்து அணியை, இந்திய அணி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE