வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்துப்பட்டு வரும் தளமாகும். பயனர் அனுபவத்தை மேம்படுத்த பயன்பாடு தொடர்ந்து பல புதிய அம்சங்களை இணைத்து வருகிறது.
வாட்ஸ் அப் செயலியில் செய்தி புகைப்படம் வீடியோ பகிரத் தெரிந்து பயன்படுத்துவர் பலரும் அதில் இருக்கும் நுணுக்கங்கள் அறிந்துக் கொள்வதில்லை.
இதனிடையே, வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட அரட்டை மற்றும் குழு அரட்டைகளை மறைக்க வாட்ஸ் அப்பின் காப்பக அரட்டை அம்சத்தை பயன்படுத்தலாம்.
வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட அரட்டை மற்றும் குழு அரட்டைகளை மறைக்க வாட்ஸ்அப்பின் காப்பக அரட்டை அம்சத்தை பயன்படுத்தலாம். மேலும், உங்கள் சேட்டிங்கை நீக்காமல் நிரந்தரமாக மறைக்க இந்த அம்சம் பயன்படும்.
வாட்ஸ்அப்பில் சேட்டிங்கை நிரந்தரமாக மறைப்பது மற்றும் காப்பகப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
மறைப்பது எப்படி?
முதலில் உங்கள் வாட்ஸ் அப் செயலிக்கு சென்று நீங்கள் காப்பகப்படுத்த விரும்பும் தனிப்பட்ட அல்லது குழு சேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து, நீக்கு, முடக்கு மற்றும் காப்பக விவரம் உள்ளிட்ட சில விருப்பங்களை காண்பீர்கள்.
இதில் காப்பக தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். தங்கள் சேட்டிங் பட்டியலின் மேல் காப்பக பட்டன் தோன்றும் இதில் அனைத்தும் மறைக்க என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.
திரும்ப பெறுவது எப்படி?
நீங்கள் வாட்ஸ்அப்பில் காப்பக அரட்டை பகுதியை திறக்க வேண்டும். அதில், நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் அரட்டை தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியாக காப்பக பட்டனின் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள unarchive என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் காப்பக அரட்டைகளில் இருந்து ஏதேனும் புதிய தகவல்கள் வந்தால் வாட்ஸ் அப் தங்களுக்கு தெரிவிக்காது.
ஆனால் இதற்கும் மாற்று உண்டு, நீங்கள் இந்த செட்டிங்கை மாற்றலாம், காப்பகப்படுத்தப்பட்ட சேட்டிங்கை அறிவிப்புகளையும் பெறலாம்.