பிரபலமாகி வரும் கப்பிங் சிகிச்சை…!

நமது உடலின் ரத்த ஓட்டம் குறைந்து, அப்பகுதியில் உறுப்புகளின் இயக்கம் தடைபடும் பட்சத்தில், கண்ணாடி கோப்பைகளை, தலைகுப்புற கவிழ்த்து, ரத்த ஓட்டம் குறைவாக காணப்படுகின்ற இடங்களில் உடலில் நன்றாக அழுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்க கப்பிங் சிகிச்சை என்று பெயர்.

இச்சிகிச்சை தற்பொழுது நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இது புதியது அல்ல. இது பண்டைய தமிழர், எகிப்திய, சீன, மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரங்களில் இருந்துள்ளது.

உலகிலேயே பழமையான மருத்துவ பாடப்புத்தகங்களில் ஒன்றான எபேர்ஸ் பாப்பிரஸ்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பிங் சிகிச்சை (Cupping Theraphy) என்பது ஒரு மாற்று மருத்துவமுறை ஆகும். இதில் ஒரு சில நிமிடங்களுக்கு நோயாளியின் (Skin Care) தோலின் மீது கண்ணாடி, உலோகம் அல்லது மரத்தாலான வெற்றிடமாக்கப்ட்ட ஒரு குப்பியைத் தலைகீழாக பொருத்துவர்.

இதனால் குப்பியின் தசை இழுப்பில் வலி குறைவு, வீக்கம் குறைவு, இரத்த ஓட்டம் சீராகுதல், சதை இறுக்கம் குறைவு உண்டாகும். உலர்ந்த முறை இதில் சிறிய அளவு வெற்றிடம் ஏற்படுத்தி குப்பிகளை தோளில் கவிழ்த்தி 15 நிமிடங்கள் வைக்கப்படுகிறது.

இது பொதுவாக கண்ணாடி அல்லது நெகிழியால் செய்யப்பட்டது. நீள்கோளம், கோளம், அரைக்கோளம் என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.

சிகிச்சைக்குப்பின் கப்பிங் அச்சு சிறிது நேரத்தில் மறைந்துவிடும் மேலும் இது வலி குறைவான முறையாகும்.

நெருப்பைப் பயன்படுத்தி இந்த முறையில் எரிச்சாராயத்தில் நனைக்கப்பட்ட எரிக்கோலை பயன்படுத்தி கண்ணாடி குப்பியில் வெற்றிடம் உண்டாக்கி முதுகு தோளில் கவிழ்த்து செய்யப்படுகிறது.

இது பரவலான ஒரு சிகிச்சை முறை. இதில் கப்பிங் அச்சு வளையம் முதுகில் தெளிவாக காணப்படுகிறது. மேலும் இம்முறையில் குப்பிகளை தோள் பரப்பில் இடம் மாற்றி அசைத்து சிகிச்சை வழங்கலாம்.

குப்பிகள் வைக்கும் இடத்தின் தோளுக்கடியில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் உடைவதால் இந்த இடம் சிவந்து காணப்படும்.

சீனர்கள் இம்முறையை சீன பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் கையாளுகின்றனர். இந்த சிகிச்சை முறையால் நிணநீர், இரத்த ஓட்டம் சீராக்குகிறது.

மேலும் சதை பிடிப்பு மற்றும் கை, கால் தசை சம்பந்தமான இருக்கங்களை சரியாக்குகிறது. இம்முறை தோள் புண் மற்றும் பிரசவத்திற்கு பின் உண்டான தசை தழும்புகளுக்கு உகந்ததல்ல.

ஈரப்பதம் இந்த சிகிச்சை முறை வலிமிகுந்ததாகும். தோளில் சிறிய காயத்தை ஏற்படுத்தி அதில் குப்பிகளை வைத்து இரத்தம் உரியும் முறையாகும். இந்த சிகிச்சை முறை இஸ்லாமிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

கப்பிங் சிகிச்சை பயன்கள்

முதுகு வலி, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, தசைகளில் ஏற்படும் வலிகள், ஆறாத புண்கள், கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள், விளையாடும் போது ஏற்படும் காயங்கள், தழும்புகள், ஆஸ்துமா அல்லது சளியினால் மூச்சுக்குழல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன இதில் சீராவதாக கூறப்படுகிறது.உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் பாதிப்புகளால், குறிப்பிட்ட பகுதியில் ரத்தஓட்டம் தடைபடுகிறது. இந்த பகுதியில், கப்பிங் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம், ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் நீக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.