நயன்தாராவின் கணவராக நடிக்கப் போகிறவர் யார்? – காட்ஃபாதர் சர்ச்சை

தெலுங்கு காட்ஃபாதரில் மஞ்சு வாரியரின் வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர்.
தெலுங்கு காட்ஃபாதர் படத்தில் நயன்தாராவின் கணவராக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதையொட்டி பல்வேறு யூகங்கள் கிளப்பப்படுகின்றன.

மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் காட்ஃபாதர். மோகன்லால் நடித்த வேடத்தில், சிரஞ்சீவி நடிக்க மோகன்ராஜா இயக்குகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. லூசிபரில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்தார்.
கதைப்படி இவர் மஞ்சு வாரியரின் இரண்டாவது கணவர். மஞ்சு வாரியருக்கு முதல் கணவன் மூலம் டீன்ஏஜ் மகள் இருப்பாள்.
தெலுங்கு காட்ஃபாதரில் மஞ்சு வாரியரின் வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். லேடி சூப்பர் ஸ்டார் இந்த வேடத்துக்கு எப்படி சம்மதித்தார் என்பதே ஆச்சரியம். காரணம் டீன்ஏஜ் பெண்ணுக்கு அம்மா கதாபாத்திரம். அப்படியொன்றும் வலுவாக ரோலும் அல்ல.

மஞ்சு வாரியரின் கணவர் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்ததால் அது தெரியவில்லை.தெலுங்கில் அந்த வேடத்தில் பிஜு மேனன் நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு சத்யதேவ் என்ற நடிகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். விவேக் ஓபராயுடன் ஒப்பிடுகையில் சத்யதேவ் சின்ன நடிகர். அத்தனை பிரபலமும் இல்லை. இவருக்கு ஜோடியாக நயன்தாராவா என்று நயன்தாரா ரசிகர்கள் இப்போதே முனக ஆரம்பித்துள்ளனர். சத்யதேவ் தான் ஜோடி என்றால் நயன்தாரா படத்திலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE