பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு கோவிட் தொற்று

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் – பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமார் 90 மாணவர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கொங்கெட்டியாவ பாடசாலையில் 2, 3 மற்றும் 4 ஆம் தரங்களில் பயிலும் நான்கு மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லைவும் ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE