பிரித்தானியாவில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஊக்கமளிக்க அடுத்த ஆண்டு முதல் குறைந்தபட்ச ஊதிய தொகையை அதிகரிப்பதாக பிரித்தானிய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
சான்செலர் ரிஷி சுனக் வரும் புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், 2022-ஆம் ஆண்டு முதல் 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை (National Living Wage) உயர்த்தி அறிவிக்கவுள்ளார்.
தற்போது, ஒரு மணி நேரத்துக்கு 8.91 பவுண்டுகள் என இருக்கு குறைந்தபட்ச ஊதியம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 9.50 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஆதாவது, ஒரு சராசரி ஊழியர் ஆண்டுக்கு குறைந்தது 1000 பவுண்டுகள் அதிகமாக பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 21 மற்றும் 22 வயது பணியாளர்களுக்கு ஏப்ரல்-1 முதல் மணிக்கு 9.18 பவுண்டுகளும், அப்ரண்டிஸ்களுக்கு மணிக்கு 4.81 பவுண்டுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டோரி அமைச்சர்கள் முன்னதாக 2024-ஆம் ஆண்டுக்குள் 21-வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய தொகையை மணிக்கு 10.50 பவுண்டுகள் வரை அதிகரிக்கவுள்ளதாககூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.