ஆப்கானிஸ்தானில் உரிய நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால், அங்கிருக்கும் மக்களில் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்று உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, பல நாடுகளு ஆப்கானிஸ்தானுக்கு வழக்கம் போல் செய்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல விஷயங்களை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக அங்கு பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சம், விலைவாசி திடீர் உயர்வு போன்ற பிரச்சனை எழுந்துள்ளது.
இதற்கு தாலிபான் அமைப்போ, நாங்கள் கடந்த 20 வருடன் அனுபவிக்காத துயரத்தையா நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள் என்று கூறிவிட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் உணவு கிடைக்காமல் ஏராளமான மக்கள் திண்டாடி வருவதாகவும், உரிய நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவு திட்ட அமைப்பின், தலைமை இயக்குநர் பிஸ்லே கூறுகையில், ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அங்கிருக்கும் குழந்தைகள் பல பசியால் இறக்கப் போகிறார்கள். நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.உலகநாடுகள் நிதி வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் போனால் லட்சக்கணக்கான மக்களும், குழந்தைகளும் இறப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் 2 மாதங்களில் கடும் பட்டினிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால், உலக நாடுகள் இதனை உணரவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.