ரொறன்ரோவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொலிஸாருக்கு முக்கிய தகவல்!

ரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு இவ்வாறு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது நெருக்கடி நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை மருத்துவ மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட உள்ளதாப தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.