பிரித்தானியாவில் இனி இவர்களுக்கு மட்டுமே ‘தடுப்பூசி கடவுச்சீட்டு’ – நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறை!

பிரித்தானியாவில் ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட’ நபர்களுக்கான தடுப்பூசி கடவுச்சீட்டு (Vaccine Passport) விரைவில் மூன்று டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு 50,000-க்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கலாம், ஆனால் இது மிகுந்த ஆபத்தையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் துடிக்கிறது.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் மூன்று டோஸ்களையும் செலுத்தினால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக ஏற்றுக்கொள்ளப்படும்.

அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கடவுச்சீட்டு வழங்கப்படும் என்ற முடிவிற்கு அரசாங்கம் வந்துள்ளது.இந்த புதிய விதிமுறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரித்தானியர்கள் நிச்சயமாக பூஸ்டர் தடுப்பூசி (மூன்றாவது தடுப்பூசி) போடவேண்டியது கட்டாயமாகும்.

பராமரிப்பு அமைச்சர் கில்லியன் கீகன் (Gillian Keegan) கூறுகையில், ‘முழு தடுப்பூசி’ என்ற வரையறை – மக்கள் இப்போது பொதுவாக PCR சோதனை செய்யாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறது.

எனவே, PCR சோதனைகள் செய்யாமல் நாடுகளுக்குள் நுழைய மக்களுக்கு விரைவில் மூன்று ஜாப் தேவைப்படலாம் என்று ஆவர் கூறியுள்ளார்.

தற்போது, ​​50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள், பூஸ்டர் ஷாட்களுக்கு தகுதியுடையவர்கள்.

ஆனால் அதைப் பெற அவர்கள் இரண்டாவது டோஸுக்குப் பிறகு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

எனவே விடயங்களை விரைவுபடுத்த, அரசாங்கம் இந்த இடைவெளியை தளர்த்த பார்க்கிறது, எனவே அதிகமான மக்கள் தங்கள் பூஸ்டர்களை விரைவில் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE