பனிப்பொழிவால் காயம் பட்டால் கனடா மக்கள் வழக்குத் தொடுக்கலாம்

கனடாவில் நகராட்சிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் பனி அகற்றுவதில் அலட்சியம் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தீர்ப்பு தொடர்பான சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2015ல் நிகழ்ந்துள்ளது. பெண் ஒருவர் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனித்திட்டால் காயம் பட்டுள்ளார்.

இதனையடுத்து தமக்கு 1 மில்லியன் டொலர் இழப்பீடு அளிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார் Taryn Joy Marchi. இந்த நிலையில், வியாழக்கிழமை கனடாவின் உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிராக ரொறன்ரோ, Abbotsford உள்ளிட்ட நகரங்கள் களமிறங்கின. ஆண்டுக்கு பல மில்லியன் டொலர்கள் தொகையை பனி நீக்கம் செய்வதற்காக ஒவ்வொரு கனேடிய நகரங்களும் செலவிட்டு வருகிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நெல்சன் நகரில் தமது காலில் காயம் பட்ட காரணத்தாலையே Taryn Joy Marchi வழக்குத் தொடுக்க முன்வந்துள்ளார். மேலும், பனி அகற்றுவது நகர நிர்வாகத்தின் முக்கிய கொள்கை எனவும், இதனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் கீழ் நீதிமன்றம் முன்னர் சுட்டிக்காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE