இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயற்பட்டு வரும் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து விடைபெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு உறவின் எதிர்காலம் குறித்து அமைச்சர் பீரிஸ், தூதுவர் டெப்லிட்ஸுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக சர்வதேச அரங்குகளில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
அலைனா பி. டெப்லிட்ஸ் 2018ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான தூதராக பதவியேற்றார்.
அவர் 2015-2018 வரை நேபாளத்திற்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதராக ஜூலி சுங்கை நியமித்துள்ளார்.
இந்த நியமனத்திற்கான செனட் சபையின் உறுதிப்பாடு நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.