பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் Covid-19 தொற்றினால், 49ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டதோடு 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 85 இலட்சத்து 89ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 39ஆயிரத்து 31 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 21ஆயிரத்து 995 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 780 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36ஆயிரத்து 802 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 28ஆயிரத்து 711 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.