பிரான்சில் டீசல் விலை தீடீரென்று வரலாறு காணத உயர்வைக் கண்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் டிரைவர்கள் பற்றாக் குறை காரணமாக சமீபத்தில் தான் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், தற்போது பிரான்சில் டீசல் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை முதல் நாட்டில் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை, 1.5354யூரோவை தொட்டுள்ளது.
இது கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி தெரியவந்துள்ளது. இதே ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த 2018-ஆம் 1.5331 யூரோவுக்கு விற்பனையானது.
அதன் பின் விலை தொடந்து குறைந்து கொண்டே வந்தது.கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் திகதி ஒரு லிட்டர் டீசலின் விலை 1.15778 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த வாரம் கச்சா எண்ணெயின் பீப்பாய்கள் உலகளாவிய விலை 82 டொலர்களை எட்டியது.
இது கடந்த 12 மாதங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு என்பதால், எரிபொருளின் விலை கடந்த சில நாட்களாக உயர்வுக்கு காரணம் என்று தகவல்கள் கூறுகின்றனர.
மேலும், பிரான்சில் SP95 பெட்ரோலின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது SP95 ஒரு லிட்டர் விலை 1.6332 யூரோவுக்கு விற்கப்படுகிறது .
இது கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகபட்ச விலையேற்றத்தை பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.