பிரித்தானிய துறைமுகத்தில் குவியும் கண்டெய்னர்கள்: உருவாகும் அடுத்த சிக்கல்

பிரித்தானியாவின் பரபரப்பான Felixstowe துறைமுகத்தில் குவியும் கண்டெய்னர்களால், பல்பொருள் அங்காடிகளுக்கான விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் உணவு பண்டங்களின் தட்டுப்பாடு மட்டுமின்றி, பல்வேறு சிறு வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனரக சாரதிகளின் பற்றாக்குறை காரணமாகவே, Felixstowe துறைமுகத்தில் கண்டெய்னர்கள் வெளியேற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக Felixstowe துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்கள் வெளியேற்றப்படாமல் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவுக்கான 40% கண்டெய்னர் இறக்குமதியை Felixstowe துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கண்டெய்னர்களின் எண்ணிக்கை 15 முதல் 20 விழுக்காடு வரையில் சரிவடைந்துள்ளதால்,பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக இயங்கும் Felixstowe துறைமுகத்தில் தற்போது 7,500 கண்டெய்னர்கள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மிகப்பெரிய வணிக கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk சில்லறை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் நீடிக்கும் தாமதங்கள் காரணமாக, எதை அனுப்புவது என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக இயங்கும் Felixstowe துறைமுகத்தில் தற்போது 7,500 கண்டெய்னர்கள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மிகப்பெரிய வணிக கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk சில்லறை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் நீடிக்கும் தாமதங்கள் காரணமாக, எதை அனுப்புவது என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.