கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்: இந்தியா வம்சாவளி வைத்தியருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளி சேர்ந்த வைத்தியர் உள்பட 2 போ உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கலிஃபோா்னியா மாகாணம், சான்டீ பகுதியிலுள்ள சான்டானா உயா்நிலைப் பள்ளி அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாவது,

இந்திய வம்சாவளியைச் சோந்த வைத்தியர் சுகதா தாஸ், அரிஸோனா மாகாணத்தில் யூமா மண்டல மருத்துவ மையத்தில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி வந்துள்ளார். தனக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் சுகதா தாஸ் திங்கட்கிழமை சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கோளாறால், அது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விமானம் கீழே விழுந்ததில் இரு கட்டடங்கள் தீப்பிடித்துள்ளன, இதில், தரையிலிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.