ஜெர்மனி அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படமாட்டாது என ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகில் பல்வேறு நாடுகள் மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனையை செய்தவற்காக நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெர்மனி அர்சாங்கம் கொரோனா பரிசோதனையை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனி மக்கள் இனிமேல் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற நாடுகளில் உள்ளது போல உணவகங்கள் முதலான பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் கொரோனா பரிசோதனை செய்ததில் எதிர்மறையான முடிவு வந்த சான்றிதழை சான்றாக காட்ட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதிலும் சிலர் தடுப்பூசி பெறுவதற்கு பதிலாக இலவச பரிசோதனைகள் செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை ஆதாரமாக காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த முடிவு கொண்டு வரப்பட்டதால் கொரோனா சான்றிதழ் வாங்குவதற்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மருத்துவ காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதவர்கள் போன்றோருக்கு மட்டும் கொரோனா தொற்று பரிசோதனை இலவசமாக செய்யப்படும். மேலும் 12 முதல் 17 வயது வரை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவச கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினரால் பரிந்துரைக்கப்படுபவர்களும் இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தொற்றுக்கான அறிகுறி உடைவயர்கள் இலவச பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE