கடந்த ஒக்ரோபர் மாதத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 7.5 சதவீதம் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. செப்டம்பர் முதல் அக்டோபர் வரை, (SSB) நுகர்வோர் விலைக் குறியீட்டு மதிப்பீட்டின் படி, பொருட்களின் விலைகள் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளமையினை காட்டுகின்றன.
உணவுப் பொருட்கள் மற்றும் மது அல்லாத பானங்களே அதிகம் விலையேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை ஒரு வருடத்தில் 13.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
வருடத்திற்கு இரண்டு சதவீதத்திற்கு மேல் விலைகள் உயரக்கூடாது என்று Norges Bank இலக்கு வைத்துள்ளது (பணவீக்க இலக்கு). எனவே விலை உயர்வைக் குறைக்க கொள்கை வட்டி விகிதம் விரைவாக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு ஏற்கனவே மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.