மண்ணெண்ணெய் கிடைத்தால் கடலுக்கு போகலாம்

தற்கால பொருளாதார நெருக்கடியில் மீனவ சமூகத்தின் பிரச்சிணைகளை அரசு கண்டும் காணாத மாதிரி இருக்கின்றது என தேசிய மீனவ தொழிற்சங்க தலைவர் ஆதம்கண்டு ஜெமால்தீன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நீர்கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

ஏனையவர்களைப் போல் மீனவர்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கடலுக்குச் செல்ல முடியாது.

மண்ணெண்ணெய் கிடைத்தால்தான் கடலுக்கு போகலாம். கடந்த 4 மாதங்களாக தொழில் இல்லை. இதனால் வாழ்வாதர பிரச்சிணை. மக்களுக்கு போஷாக்கான உணவை கொடுக்க முடியாத நிலை என்றார்.

ஒடுக்குமுறை சட்டங்கள் ஊடாக மக்களின் துன்பங்களை மறைக்க அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்ததுடன் மீனவர்களுக்கு தேவையான அளவு எரிபொருள் வழங்காமை, எண்ணெய் விலையை அதிகரித்தமை, சட்டவிரோத மீன்பிடி முறைக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்தாமை, இந்திய மீனவர்களின் பிரச்சிணைக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தராமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குரியாகியுள்ளதானால் தொழிற்சங்க பிரதிநிதிகள் என்ற முறையில் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் கவலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மீனவர்கள் என்ற அடிப்படையில் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

தற்போதைய முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக போராடிய இளைஞர்களை பயங்கரவாதம

தடைசட்டத்தில் கைது செய்வது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்.

மண்ணெண்ணெய் விலையை உடனடியாக் குறைத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

மீனவர்களுக்கான எரிபொருளை தொடர்ந்து வழங்குவதற்கும் அதனைக் கண்காணிப்பதற்கும் மீனவ சங்கங்களூடாக வழங்குவதற்கும் அளவை அதிகரிப்பதற்குமான பொறிமுறையை ஏற்படுத்தல்.

இலங்கையின் கடல் பிரதேசங்கள் மற்றும் நன்னீர் மீன்பிடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான சட்டவிரோத மீன்பிடி முறைகளை எடுப்பதற்கு சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல்.

மீன்பிடி சார்ந்த உற்பத்திகளிலும் அறுவடைக்குப் பின்னரான உற்பத்திகளில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் உற்பத்திகளை மீள ஆரம்பிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மாவட்ட மட்டத்தில் திட்டங்களை தயாரித்தல். மீனவ குடும்பங்களின் பிள்ளைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்தல்.

2007ல் உலக தொழிலாளர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட C -188 மீன்பிடி உடன்படிக்கையை இலங்கையில் அங்கீகரித்து சட்டதிட்டங்களை அமைத்து மீனவர்களின் ஆழ்கடல் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை தமது தொழிலை கட்டியெழுப்ப முடியாமல் தவிக்கும் வடபகுதி மீனவர்களை பாதிக்கின்ற முக்கிய பிரச்சிணையான இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை முற்றாக தடுத்து நிறுத்துவதற்கு 2017 ம் ஆண்டின் 11ம் இலக்க சட்டம் மற்றும் 2018ம் ஆண்டு 01 ம் இலக்க சட்டம் என்பன உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மீன்பிடி உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

அரசு இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் மீனவக் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கவணத்தைச் செலுத்த வேண்டும்.

இவ் ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார, திட்ட இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன், தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் செயலாளர் திருமதி எச்.பி.சி. மானெல், காலி கிளை செயலாளர் பீ.எச். லெம்பட், நீர்கொழும்பு கிளை பிரதிநிதி திருமதி மானெல் ஹில்டா, முன்னால் தலைவர் லோயல் பீரிஸ், ஊடக பேச்சாளர் எம்.எம். மில்டன் ஆகியோர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE