
சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதாகவே அக் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு வரும் திசையில் மாற்றிக்கொண்டு குறித்த கப்பல் வேறு திசை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒருசில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இலங்கையில் இருந்து 650 கடல் மைல் தொலைவில் ‘யுவான் வாங் 5’ கப்பல் மெதுவாக இலங்கையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக தொடர்ச்சியாக இந்திய செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.