கூட்டமைப்புக்கு எம்.பி சித்தார்த்தன் எச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சில கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளராக இருந்து கொண்டு சுமந்தினுடைய சில கருத்துக்கள் கூட்டமைப்பை உடைப்பதாக மக்கள் மத்தியில் ஒருகருத்து காணப்படுகின்றது.

இது தொடர்பாக தங்களுடைய கருத்து என்னவென்று கேள்வியெழுப்பிய பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய ஊடகப் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரன் கடந்த கால அரசாங்கத்திலேயே காணப்பட்டார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற பின்பு இருவருடைய பெயர்கள் ஊடகப் பேச்சாளருக்காக பிரேரிக்கப்பட்டது ஒருவர் ஸ்ரீதரன் மற்றவர் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய தலைவர் இரா.சம்பந்தன் அடைக்கலநாதனுக்கு வாக்களிப்பதாக தெரிவித்த நிலையில் 5 -5 என்று வாக்கு சமபட்ட நிலையில் தானொரு முடிவு எடுத்து பின்னர் அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று வரை எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லை. ஆகவே இந்த காலகட்டத்தில் எங்களுடைய 10 உறுப்பினர்களுமே தங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகின்ற பேச்சாளர்களாக காணப்படுகின்றார்கள்.

மேலும் எம்.ஏ. சுமந்திரன் சில விடயங்களை ஆர்வக்கோளாறில் கதைத்து கொண்டு வருகின்றார் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றைய கட்சியை பற்றி கதைக்காது தொடர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயமான விடயமாக காணப்டுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து ஏறக்குறைய ஒரு ஆறு கோடி ரூபா பெறுமதியான பணத்தை பெற்று விட்டதாகவும் அதன் பெறுமதி சரியாக சொல்லப்படவில்லை ஒரு செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

என்னை பொறுத்தவரை நான் கூற வேண்டும் என்னவென்றால் நாங்கள் பொதுவாக யாருமே கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக வாக்களித்ததாக நம்பவில்லை ஏனென்றால் வேறொருவருடைய கருத்தை நாங்கள் கேட்கவும் இல்லை கட்சி எடுத்த முடிவிற்கு நாங்கள் என்றும் மாறாக வாக்களிக்கவுமில்லை.

இரண்டாவதாக எங்களுக்குரிய ஆறரை கோடி வழங்கியது என்று சொன்னால் எமது குடும்பம் தேசிய கல்வியிகல்லூரிக்காக கொடுத்த காணி எங்களுடைய குடும்பத்தாரால் வழங்கப்படுகின்ற பொழுது ஏறக்குறைய அந்த நேரத்தில் முப்பது நாற்பது கோடி விலை மதிப்பாக இருந்தது.

இன்று அதனுடைய மதிப்பு பெருகி காணப்படுகிறது. மேலும் எனக்கு பணம் தேவையென்றால் அதைவிற்றிருந்தால் யோசித்து பாருங்கள் நான் எவ்வளவு பணத்தை எடுத்திருக்கலாம் ஆகவே அதனை நான் விற்கவில்லை.

மேலும் ஸ்கந்தவரோதயா கல்லூரி, சுப்பிரமணியம் பூங்கா என பல கொடைகளையும் எனது தந்தை ஆற்றி இருக்கின்றார்.

அது மாத்திரமல்ல நீங்கள் கடந்த காலங்களில் பார்த்தீர்கள் என்றால் இப்படியான தேர்தல்கள், நம்பிக்கை தீர்மானங்கள் எல்லாம் வருகின்ற பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கின்ற பொழுது இப்படியான கதைகள் வருவது மிக அதிகமாக இருக்கின்றது.

முக்கியமாக பார்த்தீர்கள் என்றால் கடந்த அரசாங்கத்திலே ரணில் விக்கிரமசிங்க பதவி விலக்கப்பட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கிய பின்பு மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரனை மகிந்த மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட போது 40, 50 கோடி ரூபாய் கூட்டமைப்பு தலைமைக்கு கொடுக்கப்பட்டதாகவும் தமிழரசு கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டதாக மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

என்னை பொறுத்தவரை அவற்றையெல்லாம் நம்பவில்லை ஆனால் கொடுக்கப்பட்டதாக கதைத்திருக்கின்றார்கள். அதனுடைய உண்மை தன்மையை அவர்களுக்கு தான் தெரியும் இன்று கூட இப்படியான கதைகள் வருவதற்குரிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நலிவு படுத்துவதற்குரிய செயற்பாடுகளே காணப்படுகிறது.

இதில் துக்ககரமான கருத்து காரணம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சேறு பூசுவதன் மூலம் அடுத்த தேர்தலில் எங்களை விட கூடுதலான விருப்பு வாக்கை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தவறு.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குகள் இல்லாது போகலாம் இங்கு எமது கட்சி முக்கியம் பல கட்சிகள் கடந்த காலத்தில் போயிருக்கின்றன வந்திருக்கினற்ன.

ஆனால் இன்று ஒரு மிகப் பலம் பொருந்திய கட்சியாக காணப்படுகின்ற இந்த கட்சியை உடைப்பதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் உடைப்பதற்கான காரணமாக அமையும் இது சிங்கள தேசியத்திற்கு பேரினவாதிகளுக்கு உதவி செய்வதாகவே நான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயம் நிச்சயமாக என்னை பொறுத்தவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்வதில்லை. நான் மாற்றாக ஒரு நன்மை செய்யப்போகிறேன் என்று பணம் பெற்றதுமில்லை என்னை பொறுத்தவரை நான் என்னை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை.

மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் எங்களுடைய கடந்த காலங்களை பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எப்படி செயல்பட்டு இருக்கின்றோம் என்று ஆகவே நான் சொல்ல தேவையில்லை.

ஆனால் இவ்வாறான வதந்திகள் வருகின்ற பொழுது நான் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன தூதுவரை ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பு சந்தித்தமை தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன வென்று கேட்டபொழுது தூதரகங்களோடு உரையாடுவது தவறில்லை.

கலந்துரையாடல் செல்லும் பொழுதும் என்னிடம் கூறவில்லை சந்தித்த பின்பும் என்னுடன் கலந்துரையாடவில்லை ஜனாதிபதி தேர்தல் நெருங்கி இருந்த பொழுது சுமந்திரன் இரண்டு நாட்களின் முன்பு சீன தூதுவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒரு தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சந்திப்பது தவறில்லை ஆனால் மர்மம் நிறைந்ததாக சந்திப்புகள் இடம் பெறுவது பல்வேறு கேள்விகளை குறித்த ஜனாதிபதி தேர்தல் மீதான வாக்கெடுப்பு காலத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஐயத்தை உண்டாக்கியுள்ளது.

ஆகவே காலம் நேரத்தை கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.