
விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு, காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவர். இதன்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.