பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி காரணமாக பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சினையை சந்திது வருகிறது.
நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகரிக்கும் கோடை வெப்பம் மற்றும் மின் தேவையின் காரணமாக மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.