
காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் 13 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரம்புக்கனையில் பொதுமக்களால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த நபரை காலிமுகத்திடலில் கலந்துகொண்ட மக்கள் நினைவு கூர்ந்தனர்.