ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை (20.04.22) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் ​அறிவித்துள்ளனர்.

இதேவேளை ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, காயமடைந்த போராட்டக்காரர்கள் உள்ளிட்ட 24 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில் 8 பேர் பொலிஸார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.