இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி, விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் 4 நாட்களுக்கத் தேவையான டீசல் மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது 22,000 மெற்றிக் தொன் டீசல் இருப்பதாகவும், டீசல் ஒருதொகையை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வழமைக்கு மாறாக மக்கள் அதிகளவு எரிபொருளை பயன்படுத்துவதால் நாட்டில் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5,000 மெற்றிக் தொன் டீசல் வெளியிடப்படுவதாகவும், அந்தத் தொகை எதிர்காலத்தில் 3,000 மெட்ரிக் தொன்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கம்மன்பில தெரிவித்தார்.