![எச்.வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/03/42.jpg?fit=318%2C185&ssl=1)
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் வலிமை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இதில் அஜித், ஹுமா குரைஷி நடித்திருக்கிறார்கள். இந்த படம் பற்றிய விமர்சனங்கள் இருவிதமாக வந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதியும், யோகி பாபுவும் நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித் படத்திற்கு பிறகே இந்த படத்தை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இதனையும் போனி கபூரே தயாரிக்கிறார் . இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.