தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரேரா நகருக்கு அருகில் உள்ள டோஸ்கிபிரதாஸில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து 35 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மண்ணில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொலம்பியாவின் பேரிடம் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடுன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.