யுக்ரைனில் போரைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தாம் கருதுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யா தமது தனிப்பட்ட பாதுகாப்பினை அதிகரிப்பது சட்டரீதியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மொஸ்கோவில் இடம்பெறும் சந்திப்பிற்கு முன்னதாக, அனைத்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்கவும், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தையினை நடத்தவும் பிரான்ஸ் ஜனாதிபதி ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யுக்ரைன் எல்லையில் ஒரு இலட்சம் ரஷ்ய துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.
எவ்வாறாயினும், தாம் யுக்ரைன் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளப்போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.