74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்றுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதன்படி 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளுக்கும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளுக்கும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளுக்கும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளுக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளுக்கும், மற்றும் வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கும் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.