சுவையான அவரைக்காய் கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது காய்கறி பொரியல் இவ்வாறு தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

அதிலும் பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட் போன்றவர்கள்தான். இதில் அவரைகாயை வைத்து அதிகமாக பொரியல் அல்லது குழம்பு தான் செய்கிறோம்.

ஆனால்அவரைககாயை சிறு பருப்புடன் சேர்த்து செய்யும் சுவையான இந்தகூட்டடை ஒரு முறையாவது உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான அவரைக்காய்கூட்டடை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, வரமிளகாய் – 5, பூண்டு – 3 பல், பாசிப்பருப்பு – ஒன்றரை டம்ளர், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் அவரைக்காயை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒன்றரை டம்ளர் பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வர மிளகாயை இரண்டாக உடைத்து சேர்க்க வேண்டும்.

அவ்வாறு 5 பல் பூண்டை நன்றாக இடித்து சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவை வதங்கிய பின்னர்அவரைகாயய் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பையும் இவற்றுடன் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொண்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை இவற்றுடன் சேர்த்து கலந்துவிட்டு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டு கடாயை ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறுதியாக கொத்தமல்லி இழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு அவரைக்காய் கூட்டு தயாராகிவிட்டது.

இதனை காரகுழம்பு சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் அல்லது சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையான சுவையில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE