வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன்?

உணவுகளில் பிரதான இடம் பிடித்திருப்பது வெங்காயங்கள் தான். ஒவ்வொரு நாளும் வெங்காயம் வெட்டும் போது கண் எரிச்சல் அடைகிறது, கண்ணீர் வருகிறது இது நம் அனைவரும் தெரியும்.

இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?

வெங்காயத்தில் வெட்டும்போது தண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் சல்பெனிக் அமிலம் திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது வெங்காயம் வெட்டும்போது காற்றுடம் கலந்து ஆவியாக மாறுகிறது.

எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது என்பது தான் உண்மையான காரணம்.

ஆனால் வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவதற்கு மற்றொரு சோக கதையும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்ந்தால் நிச்சயம் வாய்விட்டு சிரிச்சிடுவீங்க…

ஒரு ஊரில் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு இருந்தாங்களாம். இவங்க மூன்று பேரும் சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்.

ஒருநாள் மூன்று பேரும் கடலுக்கு குளிக்க செல்கையில், சொல் பேச்சைக் கேட்காத குழந்தை போன்று கடலுக்குள் சென்ற உருளைக்கிழங்கு மூழ்கி இறந்து போயிச்சாம். இதனால வெங்காயமும் தக்காளியும் துக்கத்தில் அழுதிருக்காங்க…

சரி என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு சென்ற தருணத்தில் தக்காளி திடீரென லாரியில் நசுங்கு இறந்துவிட்டதால், வெங்காயம் கதறி கதறி அழுதுள்ளது.

தனியாக அழுதுகொண்டு சென்ற வெங்காயம் கடவுளிடம் சென்று, “உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.

இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா…?” ன்னு கேட்டு, ரொம்பவே அழுதுச்சாம்…

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், “சரி…, இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க” ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதானப்படுத்தினாராம்.

(அதனால…. இனிமே யாரும், “வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது” ன்னு கேட்டா, விடை தெரியாம முழிக்காம, சோகமான இந்த சிறந்த நண்பர்களின் கதையை நிச்சயம் தெரியப்படுத்துங்க.

… அவங்க கவலை நிச்சயம் பறந்தே போயிடும்…)

 

Leave a Reply

Your email address will not be published.