கொரோனா பரிசோதனை எடுப்பதாயின் பதிவு செய்து தமக்குரிய நேரத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே Spelhaugen(Fyllingsdalen) எனுமிடத்தில் PCR பரிசோதனையை எடுத்துக் கொள்ளலாம் என பேர்கன் நகரசபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஆரம்பமாகிய காலப்பகுதியில் இருந்தே Spelhaugen(Fyllingsdalen) எனுமிடத்தில் Drop in வழியாக PCR சேவை மக்களுக்காய் நடைபெற்று வந்தது. இது மக்களுக்கு சிறந்த வசதியாகவும் இருந்தது. ஆனால் தற்போது பதிவு செய்து தமக்குரிய நேரத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே அங்கு பரிசோதனை எடுக்கலாம்.
அதேவேளை பேர்கன் Festplassen இலே Drop in வழியான சோதனையினை பெற்றுக்கொள்ளலாம் என பேர்கன் நகரசபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE