கொவிட் தொற்றுக்கு மத்தியில் எவ்வாறான புதிய கொவிட் பிறழ்வுகள் வந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினர் தயாராக இருக்கின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எமது சுகாதார கட்டமைப்பு தொடர்பாக ஒருசிலர் குறைகூறினாலும் எதற்கும் முகம்கொடுக்கும் பலம் எமக்கு இருக்கின்றது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் பலம் எமது சுகாதார பிரிவுக்கு இருக்கின்றது. பயிற்றுவிக்கப்பட்ட சிறந்த நிபுணர்கள் உள்ள சுகாதார அதிகார சபை ஒன்று இருப்பது அதற்கான சக்தி மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றது.
புதியவகை தொற்று பரவினாலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை காரணமாக அதன் பரவல் மற்றும் அதன் மூலம் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமாகி இருக்கின்றது. வீடுகளில் சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் புதிய வகை தொற்று பரவ ஆரம்பித்தாலும் அதற்கு முகம்கொடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கு எமது சுகாதார கட்டமைப்பு எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.