
தற்போது கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு சென்றாலும் நாட்டில் கடந்த மாதம் போடப்பட்ட இறுக்கமான சில கட்டுப்பாட்டு விதிகளினை சற்றேனும் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இறுக்கமான விதிகளினால் சிறுவர்கள், இளையோர் மற்றும் வேலைத்தளங்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறது. குறிப்பாக சிறுவர், இளையோரை அதிகம் விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதற்கான திட்டத்தில், அதற்கான செயற்பாடுகளினை அரசு திறந்துள்ளது.
மேல்நிலைப் பாடசாலைகளுக்கு பச்சை நிற நிலையையும், பாலர் கூடங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மஞ்சள் நிற நிலையையும் அரசு பரிந்துரைக்கிறது.
நோய்த்தொற்று நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகளின் அளவை நகராட்சிகள் தீர்மானிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.
உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நள்ளிரவு 11 மணி வரை மதுவை வழங்கலாம்.
மாசி மாத தொடக்கத்தில் புதிய பரிந்துரைகளை அரசு முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.