
கொரோனா” வைரசுக்கான தடுப்பூசிகள், இளம் பெண்களின் மாதவிடாய் சுற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாமென “நோர்வே சுகாதார நிறுவனம்” தெரிவித்துள்ளது. இதுவிடயம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மேற்படி அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
“கொரோனா” தடுப்பூசிகளின் முதல் இரண்டு ஊசிகளையும் பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மாதவிடாயின்போது வழமைக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கும் “நோர்வே சுகாதார நிறுவனம்”, எனினும் இவ்வாறு இரத்தப்போக்கில் மாற்றங்கள் ஏற்படுவது வழமைக்கு மாறானதல்ல எனவும் தெரிவித்துள்ளது.