சூர்யாவின் ஒளிப்பதிவாளர் திருமணம் : நடிகையை மணந்தார்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நிகேத் பொம்மி ரெட்டி. அதற்கு முன் பல விளம்பர படங்களுக்கும், குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுத்தம் சரணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனார். அதன்பிறகு பிளாக்ஷிப் என்ற வெப் சீரிசுக்கு ஒளிப்பதிவு செய்தார். சமீபத்தில் அன்டே சுந்தரி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் நிகேத் பொம்மி ரெட்டி தனது நீண்டநாள் தோழியும், நடிகையுமான மெர்ஸி ஜானை திருமணம் செய்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்துள்ள மெர்ஸி ஜான் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அடிப்படையில் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது திருமண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.