பிக்பாஸ் அல்டிமேட்டின் அடுத்தடுத்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்தப் போட்டியாளர் யார் என்பதற்கான அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிநேகன், ஜூலி, வனிதா விஜயகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக நுழையுள்ள தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் தாடி பாலாஜி ஆகியோருக்கான புரொமோ வீடியோ வெளியாகி அவர்கள் போட்டியில் உள்ளே செல்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்திக்கான புரொமோவில் அவருடைய சமையல் ஸ்டைலில் சுவாரஸ்யத்துடன் காரசாரமாக இடம் பெற்றுள்ளது. அபிராமிக்கான புரொமோவில் அவரின் நடனத்தை வைத்தே புரொமோவை வெளியிட்டுள்ளனர்.

தாடி பாலாஜிக்கான புரோமோவில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு ரெடியாகும் அவர், ‘தாடி பாலாஜிய பார்த்திருப்பீங்க.. இனி கேடி பாலஜிய பார்க்கப்போறீங்க’ என்ற பஞ்ச் டயலாக்குடன் பேசி என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு சீசனிலும் தனித்தனியாக முத்திரை பதித்தவர்கள். அதோடு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை சண்டை, சச்சரவுகள் மூலம் அதிகமாக மக்களை கவனிக்க வைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களை ஒன்றாக இப்போது களமிறக்க உள்ளனர். இனி இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் என்ன கூத்து அடிக்கப்போகிறார்களோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE